"சேவாக் தலைமுடியை விட என்னிடம் அதிக பணம்..." அக்தர் கிண்டல்... "தப்பான உதாரணம் தம்பி...! தலையை கொஞ்சம் பாருங்க...!"
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் வீரர் சேவாக்கின் தலையில் இருக்கும் முடிகளின் எண்ணிக்கையை விட தன்னிடம் அதிக பணம் இருப்பதாக, பாக்கிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கிண்டலாக பேசியுள்ளார்.

முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் முன்பு பேசிய வீடியோ ஒன்றில், சோயப் அக்தருக்கு பணம் தேவைப்படுவதால் இந்தியாவை புகழ்ந்து பேசுகிறார், என கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், தற்போது இது குறித்து அக்தர் கிண்டலாக பதிலளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில் "ஒருவரின் செல்வம் அல்லாவால் தான் கிடைக்கிறது; இந்தியாவால் அல்ல. சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட, என்னிடம் அதிக பணம் இருக்கிறது. நான் இதை வேடிக்கையாக தான் சொல்கிறேன், நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்" எனக் கூறியிருந்தார். அக்தரின் இந்த பேச்சை கேட்ட நெட்டிசன்கள் சேவாக்கின் தலைமுடி குறித்த புகைப்படங்களை அவருக்கு பகிர்ந்து வருகின்றனர்.
