'அபிநந்தன் பற்றிய 11 வீடியோக்களை அகற்ற யுடியூபுக்கு உத்தரவு': மத்திய அரசு!
முகப்பு > செய்திகள் > உலகம்By Siva Sankar | Feb 28, 2019 05:03 PM
ஜெய்ஷ்-இ-அகமது அமைப்பு புல்வாமாவில் தாக்குதல் செய்ததைத் தொடர்ந்து இந்தியா பதிலடி தாக்குதல் செய்தது. இதனிடையே பாகிஸ்தானில் இந்திய துணை நிலை ராணுவ விமானி சிறைபிடிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருந்தாலும் அவரை மீட்டு வரவேண்டும் என்பது ஏகோபித்த இந்திய மக்களின் அழுத்தமான கோரிக்கையாக இருக்கிறது.
ஆனால் பாகிஸ்தானில் இந்திய ராணுவ விமானி அபிநந்தன் நாளை வெளிவிடப்படுவார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ள நிலையில், அபிநந்தனைப் பற்றிய வீடியோக்கள், அவரைப்பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியுமான தகவல்கள் அடங்கிய மிக முக்கியமான 11 வீடியோக்களை யூ டியூபில் இருந்து நீக்குவதற்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சரகம் அறிவுறுத்துள்ளது.
பாகிஸ்தான் அதிகாரிகள் அபிநந்தனை துன்புறுத்தப்படும் வீடியோ, கைது செய்து அழைத்துச்செல்லப்படும் வீடியோ, அவரின் குடும்பங்களை பற்றிய விபரங்களை அபிநந்தனே பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் கூற மறுத்தபோது, அந்த தகவல்கள் அடங்கிய வீடியோக்கள் பல வெளியாகின. எனவே இது தொடர்பான 11 வீடியோக்களை யூ டியூபில் இருந்து நீக்கப்படுவதற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.