'ரகசிய கேமரா மூலம் ஆபாச வீடியோ'...சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம் !

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 03, 2019 10:55 AM

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது தொடர் கதையாகிவிட்டது.பல வகைகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.அந்த வகையில் சிகிச்சைக்கு வந்த பெண்களை அவர்களுக்கே தெரியாமல் ஆபாசமாக வீடியோ எடுத்ததாக மருத்துவமனை மீது பகீர் குற்றசாட்டு எழுந்துள்ளது.

A San Diego hospital secretly filmed 1,800 women undressing

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகானத்தின் சான்டிகோ நகரத்தில் ‘ஷார்ப் கிராஸ்மொண்ட்’ என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது.பெண்களுக்கான சிறப்பு வசதி கொண்ட இந்த மருத்துருவமனையில், பிரசவம், கருத்தடை,கருத்தரிப்பு, கருச்சிதைவு உள்ளிட்ட சிறப்பு வசதிகளுக்காக இந்த மருத்துவமனை மிகவும் பிரபலம்.இந்த மருத்துவமனையில் பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு தொடர்பாக பல்லாயிரக்கணக்கான பெண்கள் தினமும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் ரகசிய கேமராக்கள் மூலம் சிகிச்சை பெற வந்த 1800 பெண்களை ஆபாசமாக படம் பிடித்திருப்பதாக அதிர்ச்சிகரமான உண்மை தற்போது வெளிவந்துள்ளது.மேலும் கருத்தரிப்பு, குழந்தை பிறப்பு, மற்றும் அறுவைச் சிகிச்சை செய்ய வரும் பெண்களையும் அவர்களது உடல் உறுப்புகளையும் ரகசியமாக படப்பிடித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.மேலும் பெண்களுக்கு மயக்கமருந்து கொடுத்தும் இந்த கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டிருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்த விவாகரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற பெண்கள் ‘ஷார்ப் கிராஸ்மொண்ட்’ மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.வழக்கு தொடர்ந்துள்ள 81 பெண்களுக்கும் மருத்துவமனை நம்பகத்தன்மை இழந்து விட்டதாகவும்,இதனால் எங்களுக்கு மனஉளைச்சல் மற்றும் பயம் ஏற்பட்டுள்ளதாகவும் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம்,நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மாறிவிடக்கூடாது என்பதற்காகவும்,யாரேனும் தவறான மருந்துகளை வழங்குகிறார்களா என்பதனை கவனிப்பதற்காக மட்டுமே 3 கேமராக்களை பயன்படுத்தியதாக விளக்கமளித்துள்ளது.

இருப்பினும் அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அங்கிருக்கும் கம்யூட்டர்களில் பதிவாகும் என்பதால்,அதனை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதும் மிகப்பெரிய குற்றசாட்டாகவே உள்ளது.

Tags : #SAN DIEGO HOSPITAL #CAMERA #SHARP GROSSMONT HOSPITAL #CALIFORNIA SUPREME COURT