'தல'யா...கோலி'யா'?...சிவப்பா நெவெர்...மஞ்சள் தான்...வைரலாகும் ஐபிஎல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 15, 2019 01:52 PM

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) எனப்படும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் போட்டிகளை,ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள்.வெற்றிகராமாக 11 ஆண்டுகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து,பல குழப்பங்களுக்கு இடையே இந்த ஆண்டுக்கான தொடர் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது.

CSK vs RCB IPL match promo video goes viral

ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ஐபியலின் தொடக்கவிழா இந்த ஆண்டு நடைபெறாது என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும்,அதற்கான தொகையினை புல்வாமா தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும்,அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவிற்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்ச் 23ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளும் மோதுகின்றன.இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.இதற்கான வீடியோ ஒன்றை ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.