'இது சின்ன தல வெர்சன்'...என்ன விசில் போடலாமா?...இணையத்தில் பட்டையை கிளப்பும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 13, 2019 12:50 PM

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க இருக்கிறது.இதற்காக அனைத்து அணிகளும் முழு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.ரசிகர்களுக்கும் ஐபிஎல் போட்டிகளை காண தயாராகி வருகிறார்கள்.

CSK released a video of Suresh Raina singing the \'Whistle Podu\' song

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விசில் போடு பாடல் பட்டி தொட்டி எங்கும் மிக பிரபலம்.இதனிடையே சென்னை அணியின் குட்டி தல என ரசிகர்களால் அழைக்கப்படும் ரெய்னா பாடிய 'பொறுத்தது போதும்' இனி ஆட்டம் தான் என விசில் போடு'என்ற பாடலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் விளையாடிய ரெய்னா பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.இருப்பினும் சென்னை அணியின் நட்சத்திர வீரராக ரெய்னா திகழ்கிறார்.ஐபில் போட்டிகளில் அவர் ஜொலிப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags : #MSDHONI #CSK #SURESHRAINA #IPL 2019 #WHISTLE PODU