அபிநந்தனும் தமிழ்நாடு...நிர்மலா சீதாராமனும் தமிழ்நாடு...ரொம்ப பெருமையா இருக்கு...பிரதமர் மோடி!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 01, 2019 04:19 PM

பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைக்க, இன்று கன்னியாகுமரி வந்துள்ளார் பிரதமர் மோடி. அங்கு நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய மோடி அபிநந்தனும்,நிர்மலா சீதாராமனும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதனை நினைக்கும் போது பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Every Indian is proud that the brave Commander Abhinanadan from TN

அரசு‌ நிகழ்ச்சியில் பங்கேற்று பல நலத்திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வந்துள்ளார். விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். அரசு விழா நடக்கும் இடத்திற்கு காரில் வந்த மோடி மதுரை-சென்னை‌ தேஜஸ் ரயில் சேவையை மோடி துவங்கி வைத்தார்.

இந்த ‌விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முத‌ல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.இந்த விழாவில் பேசிய மோடி 'தற்போது மாவீரனாக திகழும் அபிநந்தனும்,இந்தியாவின் முதல் பெண் ராணுவ அமைச்சருமான நிர்மலா சீதாராமனும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்தார்.

மேலும் உங்களின் அரசியலை பலப்படுத்த நாட்டை பலவீனப்படுத்தாதீர்கள்.நான் இன்று இருப்பேன்; நாளை சென்றுவிடுவேன்; ஆனால் இந்தியா எப்போது இருக்கும்,என கன்னியாகுமரியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசினார்.