'மாஸ் என்ட்ரி கொடுத்த தல'...'கெத்து காட்டிய தளபதி கோலி'...தெறிக்க விடும் 'ஐபிஎல் வீடியோ'!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 07, 2019 09:37 AM
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல்'லின் 12வது தொடர் வரும் மார்ச் 23ம் தேதி துவங்கவுள்ளது.அதற்கான கொண்டாட்டங்கள் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டது.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று,தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

ஐபிஎல் அணியின் அனைத்து கேப்டன்களும் தோன்றும் அந்த வீடியோவில்,கேப்டன்கள் அனைவரும் சவால் விடும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.மைதானத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் ஒரு பக்கம் சுவற்றை தள்ளுவது போலவும் , மறு புறத்தில் அஷ்வின், பன்ட்,தினேஷ் கார்த்திக் ஆகியோர் தங்கள் அணியின் ஜெர்ஸியை அணிந்து கொண்டு அதனை தடுப்பது போலவும் வீடியோ இடம்பெற்றுள்ளது.
இறுதியில் ஐபில் வீரர்களின் முயற்சி தோல்வியடைய ,தோனி, கோலி வந்து அவர்களிடம் பேசி சவாலுக்கு அழைப்பது போன்று வீடியோ முடிவடைகிறது.மார்ச் 23ம் தேதி துவங்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.இதனிடையே தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களுக்கு கடும் உற்சாகத்தை அளித்துள்ளது.
Time flies. The next summer is here. Different teams. Different colours. One game. One love. #GameBanayegaName 🦁💛 #YelloveAgain #WhistlePodu #SummerOf19 pic.twitter.com/tyQgF4cwVD
— Chennai Super Kings (@ChennaiIPL) March 6, 2019
