'உங்க டீம்ல சச்சின், லாராவை விட...இவர் தான் பெஸ்ட்'...ஏன் அவர் அப்படி சொன்னாரு?

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 09, 2019 04:26 PM

சச்சின், லாராவை விட இந்திய கேப்டன் விராட் கோலிதான் சிறந்தவர் என,இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.அவரின் இந்த கருத்து ட்விட்டரில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

Virat Kohli Better Than Sachin Tendulkar, Brian Lara says Michael

நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில்,கோலி தனது 41வது சதத்தை நிறைவு செய்தார்.அதோடு கேப்டனாக 4000 ரன்களை அதிவேகமாக கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். முன்னதாக இந்த சாதனையை தோனி, அசாருதீன் மற்றும் கங்குலி ஆகியோர் செய்திருந்தனர். இந்நிலையில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் ட்விட்டரில் எழுந்தது.

இதற்கு பதிலளித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் ''கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' என பொருள்படும் வகையில் விராட் பதிவிட்டிருந்தார்.பின்னர் மாற்றமொரு ரசிகர்  ''சச்சின், லாராவை விட விராட் சிறந்தவரா'' என்ற ட்விட்டுக்கு "ஆம்" என பதிலளித்துள்ளார்.

விராட் கோலி 225 போட்டிகளில் 41 சதங்களை அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆம்லா,174 போட்டிகளில் 27 சதம் அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.இதற்கு முன்பு 225 போட்டிகளில் யார் அதிக சதம் அடித்துள்ளார்கள் என்று பார்த்தால் டிவில்லியர்ஸ் 25 சதமும், சச்சின் 23 சதமும் அடித்துள்ளார்கள்.ஆனால் கேப்டன்  கோலி 225 போட்டிகளில் 41 சதங்களை அடித்து எட்டாத உயரத்தில் இருக்கிறார்.