'இவ்வளவு ரன் அடிச்சும் இப்படி ஆயிட்டே'... 'நாங்க தோத்ததுக்கு இது தான் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Feb 28, 2019 03:25 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நேற்று பெங்களுரில் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

Under the captaincy of Virat Kohli, India lost the second T20I

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.அவருக்கு உறுதுணையாக ஆடிய தோனியுடன் சேர்ந்து 100 ரன்களை சேர்த்தார்.இந்த ஜோடி வலுவாக இருந்ததால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெரும் என இந்திய ரசிகர்கள் நம்பினார்கள்.ஆனால் இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் எளிதாக இந்திய அணியை வென்றது.

ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.அவரின் அதிரடியான ஆட்டம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது.இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த விராட் கோலி ''இந்திய அணி தோற்பதற்கு முக்கிய காரணம் பெங்களூரில் நிலவும் ஈரப்பதம்.இது பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சிரமமாக அமைந்தது.\

அதோடு மேக்ஸ்வெல்லின் சிறப்பான ஆட்டமும் மிக முக்கியமான காரணம் ஆகும்.இந்திய அணி டி20 கோப்பையை இழந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

Tags : #CRICKET #VIRATKOHLI #T20I