ஆசையா வளர்த்த சிங்கம்.. உணவு கொடுக்கச்சென்ற உரிமையாளரை அடித்துக்கொன்ற சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Mar 07, 2019 11:07 AM

என்னதான் வீட்டில் வளர்த்தாலும் மிருகங்கள் எப்போது என்ன செய்யும் என்று யூகிக்க முடியாது என்பதுதான் மிருகம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம்.

bizarre in Czech - Man Mauled to death because his foster lion

அதிலும் நாய்க்குட்டி, பூனைக்குட்டி என்றால் பரவாயில்லை. யானை, சிங்கம், புலி என்றால் சொல்லவே  வேண்டாம். பழக்கத்தினால் அத்தனை பெரிய யானையையும் கைக்கு அடக்கமான குழந்தை போல மாற்றிவிடும் தன்மையை பாகன் பெற்றிருப்பார்.

சர்க்கஸில் கூட அத்தனை கர்ஜனை வாய்ந்த சிங்கத்தை ரிங் மாஸ்டர் தனது சொல் பேச்சுகேட்டு ஒருவட்டத்துக்குள் சுழலும் வகையில் மாற்றி வைத்திருப்பார். ஆனாலும் அந்த யானைக்கு மதம் பிடிக்கவோ, சிங்கத்துக்கு வெறிபிடிக்கவோ நொடிகள் போதும். அவற்றின் லயம் கெடும்பொழுது அவை முழுமையான மிருகங்களாகி வளர்ப்பாளார் யார்? வழியில் செல்பவர் யார்? என்ற கணக்கெல்லாம் பார்க்காமல் எல்லாரையும் தாக்கும் அபாயம் உள்ளது.

அப்படித்தான் செக் குடியரசின் ஸ்லின் என்கிற இடத்தில் வசித்து வந்த மைக்கேல் பிராசெக் என்பவரை அவர் வளர்த்த சிங்கமே, உணவு கொடுக்கச் செல்லும்போது அவரை அடித்துக் கொன்று, குதறியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனப்பெருக்க நோக்கில் முறையான ஆவணங்களின்றி சட்ட விரோதமாக 3 சிங்கங்களை வளர்த்துவந்த இவர் அவ்வப்போது சிங்கங்களுடன் கொஞ்சிக் குலாவி புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

சட்டவிரோதமாக இப்படசிங்கங்களை வளர்த்ததற்கு 3 முறை இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதையும் மீறி சிங்கங்களை வளர்த்து வந்த இவர், ஆண் சிங்கம் ஒன்றுக்கு காலை வேளையில் உணவு கொடுக்கச் சென்றபோது அவரை எதிர்பாராத விதமாக அந்த சிங்கம் தாக்கியதோடு அடித்துக் கொன்றுமுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : #LION #FOSTERLION #BIZARRE #CZECH