'எவ்வளவு ஜாலியா சுத்திட்டு இருக்காரு'...சொகுசு வாழ்க்கையில் நிரவ் மோடி...வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 09, 2019 02:06 PM
தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடி தற்போது லண்டன் நகரில் இருப்பதாக,தி டெலிகிராப் நாளிழிதழ் வெளியிட்டிருக்கும் வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் இருப்பது வீடியோ ஆதாரத்துடன் உறுதியாகியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக டெலிகிராப் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் 'சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நிரவ் மோடியை கண்ட தி டெலிகிராப் நாளிழிதழ் நிருபர் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினார்.ஆனால் அனைத்து கேள்விகளுக்கும் நோ கமெண்ட்ஸ் என பதிலளித்து விட்டு சென்றுவிட்டார்.
நிரவ் மோடி எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது,என மத்திய அரசு கூறிய நிலையில், பிங்க் நிற சட்டையும் அதற்கு விலை உயர்ந்த மேல் கருப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்து லண்டன் சாலையில் நிரவ் மோடி சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Exclusive: Telegraph journalists tracked down Nirav Modi, the billionaire diamond tycoon who is a suspect for the biggest banking fraud in India's historyhttps://t.co/PpsjGeFEsy pic.twitter.com/v3dN5NotzQ
— The Telegraph (@Telegraph) March 8, 2019
