'நம்ம சென்னையில் பிறந்த பெண்ணுக்கு'...ஐக்கிய நாடுகள் சபையில் கிடைத்த கெளரவம்!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 08, 2019 04:51 PM

பெண்கள் தினமான இன்று,சென்னையில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் பத்மா லக்ஷ்மிக்கு ஐக்கிய நாடுகள் சபை முக்கிய பொறுப்பு ஒன்றை கொடுத்து கௌரவித்துள்ளது.

Padma Lakshmi has been appointed by the UNDP as Goodwill Ambassador

பத்மா லக்ஷ்மி சென்னையில் பிறந்தவர்.மருத்துவரான அவரது தாய் மருத்துவப் பணியை ஒட்டி அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு இடம் பெயர்ந்தார்.இவரும் அமெரிக்காவில் குடியேற தனது பள்ளி கல்லூரி படிப்பினை அங்கேயே முடித்தார்.மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் அந்த துறையில் தன்னை இணைத்து கொண்டார்.இதனிடையே உணவுத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர், டாப் செஃப் நிறுவனத்தின் செயலதிகாரி உள்ளிட்ட பல பொறுப்புக்களை வகித்தார்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை முன்னேற்ற திட்டத்துக்கான நல்லெண்ணத் தூதரக நேற்று அறிவிக்கப்பட்டார்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த பதவியானது மிகவும் பொறுப்பான ஒன்றாகும்.பல்வேறு நாடுகளில் ஏழ்மை ஒழிந்தாலும் பாலினம், வயது, இனம் ஆகியவற்றின் கீழான பாகுபாடு ஒழியவில்லை என்பது வருத்தமான ஒன்றாகும்.

உலகில் பல பெண்கள் இன்றளவும் சில மோசமான பாகுபாட்டால் துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.நிச்சயம் என்னால் ஆன உதவிகளை என்னுடைய பதவியின் மூலம் செயல்படுத்துவேன் என பத்மா லக்ஷ்மி தெரிவித்தார்.

Tags : #PADMA LAKSHMI #GOODWILL AMBASSADOR #UNITED NATIONS DEVELOPMENT PROGRAMME