'பாகிஸ்தானிடம் சிக்கிய கமாண்டர் அபிநந்தன்'...கோரமாக தாக்கப்படும் காட்சிகள்...நெஞ்சை உலுக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Feb 27, 2019 04:39 PM
புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மறுத்து வருகிறது.
இதனிடையே இன்று காலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.ஆனால் இதனை மறுத்த இந்திய விமானப்படை,பாகிஸ்தான் பழைய புகைப்படங்களை வெளியிட்டிருப்பதாகவும் அவர்கள் பொய்யான தகவலை வெளியிட்டிருப்பதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய விமானி கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டது.அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்த நிலையில்,இந்திய வெளியுறவு துறை செயலாளரும் அதனை உறுதி செய்தார்.இதனிடையே பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய கமாண்டர் அபிநந்தனை கோரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் கண்களை கட்டிக்கொண்டபடி பேசிய இந்திய ராணுவ வீரர், ‘நான் காயம் பட்டிருக்கிறேன். என் பெயர் அபிநந்தன். என் சர்வீஸ் எண் 27981. நான் ஒரு விமானி, இந்து மதத்தைச் சேர்ந்த கமாண்டோ மற்ற தகவல்களை நான் சொல்ல முடியாது, நான் பாகிஸ்தான் ராணுவத்துடன் இருக்கிறேனா?’ என்று பேசியுள்ளார்.
Video footage of IAF wing commander Abhinandan caught by Pakistan Army
— Vignesh Theni (@Vignesh_twitz) February 27, 2019
#IndianAirForce pic.twitter.com/4PkTsQb79s