'அதுக்கு அவன் தான் பொறந்து வரணும்'...'மெர்சலாக்கிய 12,000 பேரின் குரல்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 18, 2019 05:31 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தைப் பார்க்க சுமார் 12,000 ரசிகர்கள் குவிந்தனர்.அப்போது பயிற்சியில் ஈடுபட வந்த தோனியை கண்டதும் ரசிகர்கள் செய்த ஆரவாரம் விண்ணை முட்டியது.

MS Dhoni Gets Rapturous Reception In Chepauk

ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.இதன் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தோனியை தவிர மற்ற வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதனிடையே வீரர்களின் பயிற்சி மற்றும் பயிற்சி ஆட்டத்தை காண்பதற்கு சில கேலரிகளில் ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.இதனால் மைதானமே ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.சுமார் சுமார் 12 ஆயிரம் ரசிகர்கள் சென்னை அணியின் பயிற்சிப் போட்டியை கண்டு ரசித்தனர்.அப்போது தோனி மைதானத்திற்கு வந்தபோது ரசிகர்கள் அனைவரும் தோனி தோனி என ஆரவாரம் செய்ய,ரசிகர்களின் குரல் விண்ணை பிளந்தது.அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #MSDHONI #CSK #IPL #CHEPAUK #IPL 2019 #MA CHIDAMBARAM STADIUM