'மைதானத்தில் இந்திய வீரரின் உணர்வு பூர்வமான செயல்'...புகழும் நெட்டிசன்கள்...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 09, 2019 12:42 PM

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.அப்போது புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியை  அணிந்து விளையாடினர்.மேலும் தேசிய பாதுகாப்புக்கு துறைக்குப் பொதுமக்கள்  நிதி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும்,ராணுவ உடையிலானதொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

Kedar Jadhav gave a perfect salute to Lt Col MS Dhoni

இதனிடையே வீரர்களுக்கு ராணுவ உடையிலான தொப்பியை தோனி வழங்கினார்.இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக உள்ள தோனியின் ராணுவ பற்று என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அவர் அவ்வப்போது ராணுவ பயிற்சி மையங்களுக்கு சென்று ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் வீரர்களுக்கு தோனி தொப்பியை அளிக்கும்போது கேதார் ஜாதவ் யாரும் எதிர்பாராத வகையில் உணர்வு பூர்வமான காரியத்தை செய்தார்.ஆல் ரவுண்டர் ஜாதவின் கையில் தோனி தொப்பியைக் கொடுத்தவுடன்,ராயல் சலுயூட் ஒன்றை தோனிக்கு அடித்தார்.கேதார் ஜாதவின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.நெட்டிசன்கள் பலரும் கேதார் ஜாதவை புகழ்ந்து வருகிறார்கள்.

Tags : #CRICKET #MSDHONI #BCCI #INDIA VS AUSTRALIA #KEDAR JADHAV #LT COL MS DHONI #CAMOUFLAGE CAP