'நெருங்கும் உலகக்கோப்பை'...'தல' நீங்க ரெஸ்ட் எடுங்க...'தோனிக்கு பதிலாக களமிறங்கும் இளம் வீரர்'!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 09, 2019 11:09 AM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு ஒரு நாள் போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

MS Dhoni would be rested for the last two ODIs says Sanjay Bangar

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி  5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியை தழுவியது.இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ''கடைசி இரண்டு போட்டிகளில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ''உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பு இந்தியா விளையாடும் கடைசி ஒரு நாள் தொடர் என்பதால் இந்த போட்டிகள் முக்கியமான ஒன்றாகும்.இதனால் கடைசி இரண்டு போட்டிகளில்  ரிஷாப் பன்ட்,தோனிக்கு பதிலாக களமிறங்குவார்.இந்த இரண்டு போட்டிகளிலும் ரிஷாப் பன்ட் எவ்வாறு ஆடுகிறார் என்பது உற்று நோக்கப்படும்.

இதனிடையே அணியில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அது சரியாகவில்லை என்றால் அவருக்குப் பதில் புவனேஷ்வர்குமார் களமிறங்குவார் என்றார்.மேலும் தொடர்ந்து சொதப்பி வரும் தவானுக்கு பதில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது

Tags : #MSDHONI #CRICKET #BCCI #SANJAY BANGAR #ODIS #INDIA VS AUSTRALIA