'இதெல்லாம் நம்ம 'தல'யால் மட்டுமே சாத்தியம்'...'முடிஞ்சா புடிச்சு பாரு'...பட்டையை கிளப்பும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 18, 2019 09:05 AM
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் 12-வது ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில்,சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் தீவிரமான பயிற்சியில் சேப்பாக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் புகுந்து தோனியை விரட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.அன்புடன் தோனி என வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
Catch Me If You Fan #AnbuDen Version! #SuperPricelessThala @msdhoni and the smiling assassin @Lbalaji55! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/xvqaRKp9kB
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019
