கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Mar 17, 2019 10:35 PM
கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.
கோவா மாநிலத்தின் முதலமைச்சராக 4 முறை பதவி வகித்தவர் மனோகர் பாரிக்கர். மேலும் இவர் முன்னாள் ராணுவ அமைச்சராகவும் பணியாற்றியவர். கடந்த ஆண்டு கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து சில மாதங்கள் அமெரிக்கா சென்றும் சிகிச்சை பெற்று வந்தார். உடல் மெலிந்து காணப்பட்ட அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், இன்று (17.03.2019) இரவு மனோகர் பாரிக்கர் காலமானார். இவரது இறப்புக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
Extremely sorry to hear of the passing of Shri Manohar Parrikar, Chief Minister of Goa, after an illness borne with fortitude and dignity. An epitome of integrity and dedication in public life, his service to the people of Goa and of India will not be forgotten #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) March 17, 2019
Party ideologies apart a good and gentle man will always be it. Not even cancer can kill a spirit like @manoharparrikar . Have had the honour of breaking bread with him. As will the Nation, I too will remember him.
— Kamal Haasan (@ikamalhaasan) March 17, 2019
Extremely saddened to hear about the demise of Chief Minister of Goa, Thiru Manohar Parrikar.
— M.K.Stalin (@mkstalin) March 17, 2019
On behalf of DMK, I extend my deepest condolences to his family, friends and fellow party persons.