'உங்களுக்கு ஒரு ரிக்வஸ்ட்'...'ஹலோ ராகுல்'...அரங்கை அதிர வைத்த 'ஸ்டெல்லா மேரீஸ் மாணவி'...வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 13, 2019 02:22 PM

தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வந்தார்.சென்னையின் புகழ் மிக்க பெண்கள் கல்லூரியான ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார்.

Can you call me Rahul instead of sir

தன்னிடம் எளிமையான கேள்விகளை கேட்க வேண்டாம்,கடினமான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என கூறி,தனது உரையை ராகுல் காந்தி ஆரம்பித்தார்.அப்போது கேள்வி கேட்க ஆரம்பித்த மாணவி ஒருவர் 'ஹாய் சார்' என கூறிக்கொண்டு தனது பேச்சினை ஆரம்பித்தார்.அப்போது குறுக்கிட்ட ராகுல், ‘என்னைப் பெயர் சொல்லியே கூப்பிடுங்க' என்றார். உடனே அந்த மாணவியும், ‘ஹாய் ராகுல்' என்றார்.இதை கேட்ட மொத்த மாணவியர் கூட்டமும் கரகோஷம் எழுப்ப அரங்கமே அதிர்ந்தது.

அப்போது ராபர்ட் வத்ரா குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் 'ராபர்ட் மீது இருக்கும் குற்றச்சாட்டை இந்த நாட்டின் விசாரணை அமைப்புகள் கண்டிப்பாக புலன் விசாரணை செய்ய வேண்டும்.அதே போல் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து நரேந்திர மோடி மீதும் விசாரணை செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.மாணவிகளின் கேள்விக்கு சளைக்காமல் பதிலளித்த ராகுலின் அணுகுமுறை,கல்லூரி மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Tags : #CONGRESS #RAHULGANDHI #ELECTIONS #STELLA MARIS COLLEGE