'ஜாலியா நின்னு போஸ் கொடுத்த பெண்'...சுழற்றி கொண்டு சென்ற பேரலை...பதைபதைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 21, 2019 11:06 AM

ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பது,அபாயகரமான இடங்களில் நின்று போஸ் கொடுப்பது என போட்டோ பிரியர்கள், தங்களின் உயிரினை பணயம் வைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அதே போன்ற ஒரு சம்பவம் தான் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.

Bali tourist swept away by huge wave while posing on cliff

இந்தோனேசியாவில் டெவில்ஸ் டியர் என்கின்ற இந்த இடம், சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாகும். அந்த கடற்கரை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வந்து தங்களின் நேரத்தை செலவிடுவதும்,புகைப்படங்கள் எடுப்பதும் வழக்கம். அந்த வகையில் அங்கு சுற்றுலா வந்த பெண் கடற்கரையின் ஓரத்திற்கு சென்று மிகவும் ஆபத்தான முறையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென எழும்பிய பேரலை அந்த பெண்ணை சுழற்றி கொண்டு சென்றது.கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு வீடியோ எடுத்து கொண்டிருந்த ஒருவரின் செல்போனில் பதிவாகியுள்ளது.திகில் கிளப்பும் இந்த சம்பவத்தில் பேரலையால் அடித்து செல்லப்பட்ட அந்த பெண் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #BALI TOURIST