'சொந்த மண்ணில்'தல'யின் கடைசிப் போட்டி'?...ரொம்ப மிஸ் பண்ணுவோம்...நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 08, 2019 12:16 PM
'என் மீது நீங்கள் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கலாம்.ஆனால் அவை அனைத்திற்கும் பதில்,களத்தில் என்னுடைய ஆட்டத்தில் இருந்து தான் வருமே தவிர என்னுடைய பேச்சில் அல்ல' என்பதை நிரூபித்தவர் இந்திய முன்னாள் கேப்டன் தோனி.உலகக்கோப்பையுடன் தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என கூறப்படுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில்,சொந்த மண்ணான ராஞ்சியில் இதுதான் அவரின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கும் இந்திய அணி,தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கும்.இந்த போட்டியானது இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும்.இதனால் போட்டியில் இரு அணி வீரர்களும் அதிரடியாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இன்றைய போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை அணியில் சேர்த்திருப்பது முக்கிய பலமாக கருதப்படுகிறது.மேலும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 46 ரன்கள், கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் விஜய் சங்கரின் ஆட்டம் நிச்சயம் அணிக்கு பக்கபலமாக இருக்கும்.
இந்நிலையில் ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறலாம் என்ற கருத்து பலமாக நிலவி வருகிறது.ஆனால் தோனி அதனை மறுக்கவும் இல்லை,ஒத்துக்கொள்ளவும் இல்லை.அவர் ஓய்வு பெறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில்,சொந்த மண்ணான ராஞ்சியில் இதுதான் அவரின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கும்.
எனவே ராஞ்சி ரசிகர்கள் தற்போதே மிகவும் உணர்ச்சிபூர்வமாக காணப்படுகிறார்கள்.தோனியின் அதிரடியை காண்பதற்கு ஆர்வமாக இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.நாங்கள் தோனியை ரொம்ப மிஸ் பண்ணுவோம் என ராஞ்சி ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.
