இவருக்க சாதனையே முறியடிச்சிட்டாரா?...'நான் எப்போதுமே கெத்து தான்'...நிரூபித்த 'தல'!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 04, 2019 10:09 AM
இந்தியா அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த தோனி தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நேற்று முன்தினம் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.99 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி கொண்டிருந்த இந்திய அணியினை,தோனி கேதர்ஜோடி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.இந்த போட்டியில் தல தோனி புதிய சாதனை ஒன்றையும் படைத்தார்.
இதுவரை இந்தியா அணிக்காக 216 சிக்ஸர்கள் விளாசியுள்ள தோனி, ஆசிய லெவன் அணிக்காக 7 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.மொத்தமாக ஒருநாள் போட்டிகளில் 223 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.இதன்முலம் ரோகித் ஷர்மாவின் சாதனையை முறியடித்து அசத்தினார்.
இந்தியாவிற்காக 216 சிக்ஸர்கள் உடன் முதலிடத்தில் தோனி இருக்க, 215 சிக்ஸர்கள் உடன் இரண்டாவது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார். மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே சச்சின் (195), கங்குலி (189) மற்றும் யுவராஜ் சிங் (153) உள்ளனர்.மேலும் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் அரைசதம் அடித்தது மூலம் ஆஸ்திரேலியாவிர்கு எதிராக தொடர்ச்சியாக நான்காவது போட்டியில் அரைச்சதம் அடித்துள்ளார் தோனி.
இதனிடையே தனது ஸ்டைலிலில் பவுண்டரி அடித்து இந்திய அணியினை வெற்றி வெற்றி பெற செய்தார்.இதன் மூலம் தன்மீதான விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைத்தார் தோனி.
