‘இவர் மட்டும் இல்லனா’..‘சீனியர் ப்ளேயரா நீங்க விளையாடனும்னு சொன்னார்’.. ‘தல’தோனியை புகழ்ந்த பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 16, 2019 06:13 PM
இந்திய அணியிலிருந்து நீக்கப்படும் போதெல்லாம் காப்பற்றியவர் தோனி என இந்திய வேகப்பந்து வீச்சளார் இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளாரான இஷாந்த் ஷர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 267 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர்குமார் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் ஒருநாள் போட்டிகளில் இஷாந்த் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்காமால் இருந்து வருகிறது.
தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், டெல்லி அணிக்காக இஷாந்த் ஷர்மா ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இஷாந்த் ஷர்மா இதுவரை விளையாடிய 76 ஐபிஎல் போட்டிளில் 58 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இஷாந்த் ஷர்மா,‘இந்திய அணியில் பல நேரங்களில் அணியில் இருந்து நீக்கப்படும் சூழ்நிலை வரும் போதெல்லாம் தோனி பக்க பலமாக இருந்து என்னை காப்பற்றியுள்ளார். மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், தான் ஒரு சீனியர் வீரராக இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கோலி கூறியுள்ளார்’ என இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ‘சிறப்பாக பந்து வீசி விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதே என் ஆசை. வரவுள்ள ஐபிஎல் தொடரில் என்னுடைய முழு திறமையும் வெளிப்படுத்துவேன். இதன் மூலம் உலகக் கோப்பையில் இடம் கிடைத்தால் மகிழ்ச்சிதான்’ என இந்திய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.
