‘ரெண்டு நிமிஷம் அமைதியா இருங்க’.. கோலியின் கோரிக்கையை ஏற்ற ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 25, 2019 04:00 PM

நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.

Kohli had to ask the fans to stay quiet during the 2 mins silence

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி நேற்று விசாகப்பட்டிணத்தில் நடைபெற்றது. அப்போது போட்டி தொடங்குவதற்கு முன் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருக்குமாறு விராட் கோலி வேண்டுகோள் வைத்தார்.

இதனை அடுத்து இரு நாட்டு வீரர்களும் தேசிய கீதம் பாடி முடித்த பின் புல்வாமா தாக்குதலுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது மைதானத்தில் சில பகுதியில் இருந்து சத்தம் அதிகமாக வந்தது. உடனே ரசிகர்களைப் பார்த்து அமைதியாக இருக்குமாறு கோலி வேண்டுகோள் வைத்தார். இதனை அடுத்து ரசிகர்கள் உடனடியாக அமைதியாயினர்.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்து விதமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tags : #VIRATKOHLI #INDVAUS #T20 #CRPFMARTYRS