'ராணுவ விமானி அபிநந்தன் ஒரு வாரியர்’.. ‘கார்கில்’ புகழ் நச்சிகேட்டா நெகிழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Feb 28, 2019 02:01 PM
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க முனைந்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் இராணுவத்துக்கும் நேரடி பகை முரண் உண்டானது.

இதன் விளைவாக பாகிஸ்தானின் எல்லை தாண்டி பதில் தாக்குதலுக்கு முற்பட்ட இந்திய துணை நிலை ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில், அதே சமயம் பாதுகாப்பாக இருப்பதாக வீடியோ ஆதாரங்கள் வெளியாகின. அபிநந்தன் டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் என்று அறியப்படுகிறது. ஆனால் அபிநந்தனுக்கு தற்போது நேர்ந்த சூழலை பல வருடங்களுக்கு முன்பு சந்தித்தவர் நச்சிகேட்டா.
அப்போது 1999. கார்கில் போர் நடந்துகொண்டிருந்த சமயம். அப்போது நச்சிகேட்டாவுக்கு வயது 25. அபிநந்தனை போலவே அப்போது நச்சிகேட்டா இதே மிக் ரக போர் விமானத்தில் இருந்தபடி பாகிஸ்தான் மீது குண்டுவீசினார். ஆனால் அந்த சமயம் பார்த்து அவருடைய விமான என்ஜினில் உண்டான கோளாறு காரணமாக அதில் இருந்து வெளியேறி பின்னர் தன் கையில் இருந்த துப்பாக்கியின் உதவியுடன் எதிரில் இருந்தவர்களை தொடர்ந்து தாக்கினார். ஒரு கட்டத்தில் தோட்டாக்கள் தீர்ந்ததும் அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
ஆனால் தற்போது அபிநந்தனுக்கு இருந்தது போல் அல்லாமல், நச்சிகேட்டா பாகிஸ்தானின் பிடியில் இருந்தபோது அனுபவித்த துயரங்களை வெகுவருடங்கள் கழித்து கடந்த 2016-ஆம் வருடம் ஒரு ஊடகத்துக்கு பேட்டியாக அளித்தபோது, 'அந்த நாட்கள் மோசமான தருணம் தன்னை கொன்றிருப்பார்கள், தனக்கு மரணமடைவதைத் தவிர எளிமையான வழி தெரியவில்லை, ஒரு 4 நாட்கள் கடுமையான சித்ரவதைக்கு ஆளாகியதை மறக்க முடியாது, ஒரு எதிரி நாட்டு வீரராகவே நடத்தினார்கள், ஆனால் அந்த வீரர்களை சமாதானப்படுத்தி தன்னை அங்கிருந்த ஒரு முதிர்ந்த உயரதிகாரி தன் சூழலை புரிந்துகொண்டார்' என்று கூறியுள்ளார்.
மேலும் ஜெனீவா ஒப்பந்தப்படி, பிடிபட்ட எதிர்நாட்டு ராணுவ வீரருக்கு உரிய சிகிச்சை அளித்து, உயிர்ச் சேதமின்றியும் துன்புறுத்தல் இன்றியும் 7 நாள்களுக்குள் உரிய நாட்டிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட விதிகளை நினைவுபடுத்திய நச்சிகேட்டா, மிகவும் திறமான வீரரான அபிநந்தன் ஒரு வாரியர் என்பதை நினைத்து இந்தியா பெருமைப்பட வேண்டும் என்று கூறியதோடு, அவரை பத்திரமாக பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும், அவர் பற்றிய செய்தியை பாகிஸ்தான் வெளியிட்டதே அவருடைய குடும்பத்துக்கும் இந்தியாவுக்குமான நல்ல செய்தி என்று கூறினார்.
