‘பயங்கர சத்தம், கண் இமைக்கும் நேரத்தில் பறந்த விமானம்’.. இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 26, 2019 05:24 PM

இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலை பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் நேரில் பார்த்ததாக பிபிசி உருது சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

Pakistani locals confirm strike by Indian Air Force

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய விமானப்படை பதிலடி தாக்குதலை இன்று அதிகாலை நடத்தியது. இதில் பாலகோட் என்னும் இடத்தில் இருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கட்டுப்பாட்டு அறைகள் தகர்க்கப்பட்டுள்ளதாகத் விமானப்படை தெரிவித்தது.

இன்று அதிகாலை 3:30 மணிக்கு இந்தியாவின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட் என்கிற பகுதியில் அதிகாலை 3:45 மணி முதல் 3:53 மணி வரை சுமார் 8 நிமிடங்கள் தாக்குதலை நடத்தியது.

இதனை அடுத்து சகோட்டி பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முகாதீன் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

இந்நிலையில் பாலகோட் பகுதியில் வசித்து வரும் ஒருவரான ஹீத் விகார் என்பவர் இந்திய விமானப்படைத் தாக்குதலைப் பற்றி பிபிசி உருது தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‘அதிகாலை 3:30 மணியளவில் பயங்கரமான சத்தம் கேட்டது. அதன்பிறகு தொடர்ந்து பயங்கர சத்தம் கேட்டு கிராமமக்கள் அனைவரும் ஓடுவந்து பார்த்தோம்.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு விமானங்கள் பறந்து சென்றன. இந்த தாக்குதல் நடந்த 4 நிமிடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் விமானங்கள் வானத்தில் பறந்தன. ஆனால் இந்திய விமானங்கள் கண் இமைக்கும் நேரத்தில் சென்றுவிட்டதால், பாகிஸ்தான் விமானங்கள் திரும்பி சென்றுவிட்டன’ என அவர் கூறியுள்ளார்.

Tags : #INDIANAIRFORCE #IAFSTRIKES #BALAKOTATTACK #PAKISTAN