‘இனி அப்படி சொல்லுவீங்க..? சித்த ராமையாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 07, 2019 10:32 AM

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் அம்மாநில தலைவருமான சித்த ராமையா மிக அண்மையில் திலகமிடுவது பற்றிய சர்ச்சைக்குரிய பேசியதால், #SelfieWithTilak என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

here is the reason behind the trending hashtag #SelfieWithTilak

கர்நாடகாவின் படாமி என்கிற இடத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் சித்த ராமையா நெற்றியில் குங்குமம் அல்லது விபூதி திலகம் இட்டுக்கொள்பவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்று பேசியது சர்ச்சைக்குள்ளாகியது.

இதனையடுத்து, ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த விஷயத்தில் இவ்வாறு கருத்துச் சொன்னதால், சித்த ராமையாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லி பாஜகவைச் சேர்ந்த தாஜிண்டர் பக்கா, இந்த ஹேஷ்டேகினை ட்ரெண்டாக்கியுள்ளார்.

அதன்படி, திலகமிட்டுக்கொள்பவர்களை பார்த்து அச்சப்படுவதாகச் சொன்ன சித்த ராமையாவிற்கு பதில் கூறும் வகையில், அனைவரும் நெற்றியில் திலகமிட்டுக் கொண்டும், அதனை தத்தமது செல்போன்களில் செல்ஃபி எடுத்தும் அந்த புகைப்படங்களை #SelfieWithTilak என்கிற ஹேஷ்டேகின் கீழ் பதிவிடுமாறு கோரியுள்ளார். இந்த ஹேஷ்டேகும் இந்த கருத்தும் சித்த ராமையாவின் சர்ச்சைக்குரிய பேச்சும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags : #BJP #CONGRESS #SELFIEWITHTILAK #KARANATAKA #SIDDARAMAIAH ‏