'எங்க தொடங்குறோம்ன்றதுல இல்ல மாஸு..' ரஜினி, சச்சினுடன் ஹர்பஜன்.. மாஸான தமிழ் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 12, 2019 09:14 PM

அண்மையில் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

harbhajan singh tweets in tamil with the photo of rajini and sachin

முகேஷ் அம்பானியின் வீட்டுத் திருமணம் என்றால் சும்மாவா? அத்தனை கோடி செலவில், பிரம்மாண்டமாய் நடந்த அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் இந்தத் திருமணம் மும்பையில் நடந்துள்ளது. இந்த திருமணம்தான் அடுத்த சில நாட்களுக்கு ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்தது.

இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கிரிக்கெட், திரை மற்றும் தொழில்நுட்ப நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்த திருமணத்தில் இந்தியாவின் முக்கிய பிரபலங்களான நடிகர் ரஜினிகாந்த, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதனுடன் இந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தபடி ஹர்பஜன் சிங்,  'வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இரெண்டு ஸ்டம்புகளுக்கு நடுவில் இருக்கலாம் அல்லது ஒரு பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளுக்கு நடுவிலும் இருக்கலாம் எங்க தொடங்குறோம்ன்றதுல இல்ல மாஸு, எப்படி சாதிக்கிறோம்ங்கிறது தான் மாஸ்' என்று ட்வீட் செய்துள்ளார்.

கடந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வானதில் இருந்தே ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்து வருவதும், அவரது ட்வீட்டுகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதும், அவரது தமிழ் ட்வீட்டுகள் அதிக பாராட்டுக்களை பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #RAJINIKANTH #SACHINTENDULKAR #THALAIVA