‘இதனாலதான் ஐபிஎல் கோப்பையை ஜெயிக்க முடியாம போச்சு’.. உண்மையை உடைத்த கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 18, 2019 03:00 PM
ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வெல்லாததற்கான காரணம் குறித்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 12 -வது சீசன் வரும் மார்ச் 23 -ம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டிக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் நடப்பு சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை கோலாகாலமாக நடந்தது. டிக்கெட்டை பெறுவதற்காக ரசிகர்கள் அதிகாலை முதலே காத்திருந்து பெற்றுள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை வந்த தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தோனியைப் பார்க்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேற்று மைதானத்துக்கு வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
கடந்த 7 ஆண்டுகளாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கேப்டனாக இருந்து விராட் கோலி வழி நடத்தி வருகிறார். இதுவரை 96 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி 44 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் அணி பெறவில்லை.
இது பற்றி தெரிவித்த விராட் கோலி,‘தவறான முடிவுகளும், திட்டமிடல்களும்தான் ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வெல்லாததற்கு காரணம். முக்கியமான ஆட்டங்களில் எங்களுடைய திட்டம் சரியாக அமையவில்லை’ என கர்நாடகாவில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட விராட் கோலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
