அதிக பணம் சம்பாதிக்கும் பட்டியலில், பேஸ்புக் அதிபரை முந்திய 21 வயது இளம் பெண்!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Siva Sankar | Mar 06, 2019 05:41 PM

அமெரிக்க வணிகப் பத்திரிகைகளுள் முதன்மையானது போர்ப்ஸ் டைம்ஸ். வருடா வருடம் நடிகர்கள்,  நிறுவனர்கள், பெருவணிகர்கள் உள்ளிட்டோரின் சம்பளம், இவர்களிடம் புழங்கும் பணவிகிதங்கள் உள்ளிட்டவற்றை பொருளாதாரம், தொழில் மற்றும் வணிகம் சார்ந்து மதிப்பீடு செய்து இந்த பத்திரிகை வெளியிடுவதுண்டு.

Forbes billionaires list - 21yr old Kylie takes throne from Zuckerberg

இந்த நிலையில் பேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர்பர்க்கின் இடத்தையும் முந்திக்கொண்டுள்ள கெய்லி ஜென்னர் எனும் 21 வயது பெண்ணை புகழ்ந்து எழுதியுள்ளதோடு, போர்ப்ஸ் தரவரிசையின் பத்தாவது முக்கிய இடத்தைத் தந்து கவுரவித்துமுள்ளது. அப்படி என்ன செய்தார் இந்த 21 வயது இளம் பெண்.

அவரைக் கேட்டால் சாதாரணமாக எல்லோரையும் போல தங்கள் கெய்லி காஸ்மெட்டிக் நிறுவனத்தின் தயாரிப்புகளை சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ததோடு ஸ்டோர்களுக்கு சப்ளை செய்ததுதான் தான் செய்த ஒரே வேலை என்று சொல்கிறார். ஆனால் அவருடைய நிறுவனத்துடன் அல்ட்டா நிறுவனம் கைகோர்த்ததும் ஆயிரமாயிரம் ஸ்டோர்களுக்கு அவரது தயாரிப்புகள் சென்றடைந்துள்ளன.

54 மில்லியன் டாலர்களில் தொடங்கிய அவரது பிசினஸ் 360 மில்லியன் டாலர் வரையில் எட்டியது. அதற்கு ஆன உழைப்பு காலம் வெறும் ஆறு வாரங்கள்தான். ஆறு வாரங்களில் அழகு பொருட்களை பயன்படுத்தினால் சருமம் மினுமினுப்பாகும் என்று விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஆறு வாரத்தில் அழகுப் பொருள் தயாரிப்பு நிறுவனமே இத்தகைய வளர்ச்சியை அடைந்த மேஜிக் கெய்லி ஜென்னரின் வாழ்க்கையில் நடந்தேறியது.

இப்போது பில்லியன் டாலர்கள் கணக்கில் வருமானம் புழங்கும் கெய்லி ஜென்னரின் நிறுவனத்தால் கெய்லி ஜென்னர், பேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர்பர்க்கைவிடவும் அதிகம் சம்பாதிக்கும் 21 வயது இளம் பெண் என போர்ப்ஸால் கவுரவப்படுத்தப் பட்டுள்ளார். ஆனால் அதே சமயம், கெய்லி ஜென்னர் முன்னதாகவே தாய்-தந்தையரின் சொத்துக்களால் ஏற்படுத்தப்பட்ட வசதிகளில் இருந்து இந்த நிறுவனத்தை உயர்த்திக்கொண்டு வந்தவர் என்பதால், அவரை சுயமாக தன்னை வளர்த்துக்கொண்டவர் என்று போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளதை பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.

Tags : #MARK ZUCKERBERG #KYLIE JENNER #FORBES BILLIONAIRES LIST #YOUNGEST-EVER SELF-MADE BILLIONAIRE