"வீட்ல எப்போ பாத்தாலும் எலி 'தொல்லை'ன்னு..." விரட்டச் சொன்ன 'மனைவி',.. மறுத்த 'கணவர்'... கடும் கோபத்தில் 'மனைவி' செய்த 'படு'பயங்கர 'காரியம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஜிம்பாப்வே (Zimbabwe) நாட்டின் கிட்வே (Kitwe) என்னும் பகுதியை சேர்ந்தவர் ஆப்ரகாம் முஸோண்டா (Abraham Musonda). இவரது மனைவி பெயர் முகுப்பா (Mukupa).

சில தினங்களுக்கு முன் முகுப்பா, தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். ஆப்ரகாம் மற்றும் முகுப்பா ஆகியோர் தனித்தனி அறையில் வசித்து வந்துள்ளனர். அப்போது முகுப்பாவின் அறையில் எலிகள் தொந்தரவு அதிகம் இருந்துள்ளது. தனது கணவரிடம் அதனை விரட்ட வேண்டி முகுப்பா தெரிவித்த நிலையில், ஆப்ரகாம் அதனை விரட்டவில்லை என தெரிகிறது.
இதன் காரணமாக, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே, கடும் கோபமடைந்த மனைவி முகுப்பா, கணவரின் பிறப்புறுப்பைக் கடிக்க ஆரம்பித்துள்ளார். இதன் காரணமாக, வேதனையில் ஆப்ரகாம் கலங்கித் துடித்த நிலையில், உடனடியாக ஆப்ரகாமை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
