'தனிமையில் இருந்த கணவன், மனைவி'... 'சிசிடிவியில் பதிவான மர்மம்'... உண்மை தெரிய வந்ததும் ஆடிப்போன தம்பதி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Jan 22, 2021 07:09 PM

அமெரிக்காவின் டெக்சாஸ் என்னும் பகுதியில், வீடுகளில் செக்யூரிட்டி கேமராக்கள் பொருத்தும் 'ADT' என்னும் நிறுவனத்தில் டெலஸ்போரோ அவிலஸ் (Telesforo Aviles) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

us security technician pleads guilty to home security footage

அப்பகுதியிலுள்ள பல வீடுகள் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இந்த நிறுவனத்தின் மூலம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் எல்லாம் கேமராவை பொருத்தும் பணியில் அவிலஸ் ஈடுபட்டு வந்ததால், அங்குள்ள இடங்களில் எங்கெல்லாம் பெண்கள், முதியவர்கள், தம்பதியர்கள் மற்றும் குடும்பத்தினர் இருக்கிறார்கள் என்ற முழு விவரங்கள் அவிலஸ்க்கு தெரியும்.

இதனை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அவிலஸ், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள சுமார் 200 வீடுகளின் கேமராக்களை ஹேக் செய்து அங்கு என்னென்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியாமல் கவனித்து வந்துள்ளார். அதிலும் குறிப்பாக, தம்பதியர்கள் நெருக்கமாக இருப்பது, பெண்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட செயல்களின் வீடியோக்களை திருட்டுத்தனமாக கண்டு வந்துள்ளார்.

கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக, இந்த மோசமான செயலில் அவர் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கிருந்த தம்பதியர் ஒருவருக்கு சந்தேகம் எழவே, இதுகுறித்து புகாரளித்துள்ளனர். பின்னர், தான் செய்த தவறை அவிலஸ் ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. செக்யூரிட்டி நிறுவனத்தின் மூலம், வீடுகளில் நடக்கும் அந்தரங்க செயல்களை தவறாக கண்காணித்து நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு வந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CYBER CRIME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Us security technician pleads guilty to home security footage | World News.