'ஒரு பக்கம் கவுண்டவுன்'... '20 டன் வெடி மருந்து'... 'நடு கடலில் வைத்து வெடித்தால் எப்படி இருக்கும்'?... ஆட்டம் காண வைத்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்20 டன் எடைகொண்ட வெடிகுண்டை நடுக்கடலில் வெடிக்கச்செய்து சோதனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்கக் கடற்படையின் விமானம் தாங்கிய போர்க் கப்பலான USS Gerald R Ford (CVN 78) தனது முதல் திட்டமிடப்பட்ட வெடிக்கும் சோதனையை அட்லாண்டிக் பெருங்கடலில் நடத்தியது. முழு கப்பலின் அதிர்ச்சி சோதனைகளின் (FSST) ஒரு பகுதியாக இந்த நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கக் கடற்படை புதிய கப்பல்களின் வடிவமைப்பைச் சரிபார்க்க நேரடி போர் வெடிபொருட்களைப் பயன்படுத்தி இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. போர் ஏற்படும் சூழ்நிலைகளில் கப்பல்களின் திறனைச் சோதிக்கும் வகையில் நீருக்கடியில் வெடிபொருட்களை வெடிக்கச் செய்து கப்பல்களின் நிலைத்தன்மை சோதிக்கப்படுகிறது.
இந்த சோதனைக்கு 40,000 பவுண்ட் (18,143கிலோ) எடைகொண்ட வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடிப்பைத் தொடர்ந்து 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு சோதனை காட்சிகளை அமெரிக்கக் கடற்படை அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், வெடிகுண்டு வெடித்ததும் விமானம் தாங்கிய போர்க் கப்பல் ஆடுவதைப் பார்க்கமுடிகிறது.
இந்நிலையில் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளார்கள். இதுபோன்ற சோதனைகள் பவளப்பாறைகள் மற்றும் கடலில் வசிக்கும் உயிரினங்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.
Ever wonder what a 40,000 pound explosive looks like from the bridge wing of a @USNavy aircraft carrier?
— USS Gerald R. Ford (CVN 78) (@Warship_78) June 20, 2021
Watch footage from #USSGeraldRFord's first explosive event of Full Ship Shock Trials and find out! 🤯#ThisIsFordClass #WeAreNavalAviation #Warship78 pic.twitter.com/2kbeEkF0g1