ஒரு சிம்பிள் ஐடியா! காதலியின் பெட்ரூமில் படுத்துக்கொண்டே... 1000 கோடி ரூபாய் சம்பாதித்த காதலன்.. ஓவர்நைட்ல கோடீஸ்வரர் ஆனது எப்படி?
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து: காதலியில் வீட்டில் இருக்கும் படுக்கையில் படுத்துக் கொண்டே சுமார் ரூ.1000 கோடி சம்பாதித்த காதலன் தற்போது உலக புகழ் பெற்றுள்ளார்.

பணம் சம்பாதிக்க போராடும் மக்கள்:
உலக மக்கள் அனைவருக்குமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே கனவாக இருக்கிறது. இதில் நிறைய திறமையோடு பணம் சம்பாதிக்க போராடுபவர்கள் அதிகம் உள்ளார்கள். ஆனால் நேரம் கூடி வரும்போது லட்சியங்களை அடைகிறார்கள். ஆனால் அதற்கான திறமை இல்லாமல் அதிக பணம் சம்பாதிப்பதும் உண்டு.
லாட்டரி போன்ற அதிர்ஷ்டத்தை நம்பி கோடீஸ்வரர்கள் ஆவது அடிக்கடி நடக்கிறது. எவ்வளவோ சிரமப் பட்டு உழைத்தும் தங்கள் தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு இளைஞர் காதலியின் படுக்கை அறைக்குள் வைத்து ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
மனதிற்குள் இருந்த ஆசை:
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு ஐடி ஊழியரான ஜானி பவ்பார்ஹேட் கொரோனா ஊரடங்கு நேரத்தில் தன் காதலியின் வீட்டில் சிக்கிக்கொண்டார். ஐடி ஊழியரான இவருக்கு எப்போதுமே அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரு அப்ளிகேஷனை தானே உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆசை இருந்தாலும் அதற்கான நேரம் இல்லாததால் ஜான் அந்த எண்ணத்தை கடந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் காதலியின் வீட்டில் மாட்டிக்கொண்ட ஜானி, தன் காதலியின் வீட்டின் அவரது பெட்டில் படுத்துக்கொண்டு ஒரு ஆப்பை டிசைன் செய்துள்ளார்.
மிகப்பெரும் வரவேற்பு:
அந்த ஆப்பிற்கு ஹோபின் என பெயரிட்டுள்ளார். இந்நிலையில் அந்த ஆப்பை அவர் ரிலீஸ் செய்த நிலையில் அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு கிடைத்ததுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதுவரை அந்த அப்பை சுமார் 50 லட்சம் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இங்கிலாந்து நாட்டின் 113-வது பெரிய பணக்காரர்:
இந்நிலையில் ஜானின் உருவாக்கிய இந்த ஆப்பின் மதிப்பு 4 டிரில்லியனுக்கும் அதிகமாக சென்றுவிட்டது. இதன் காரணமாக தற்போது ஜானி இங்கிலாந்து நாட்டின் 113-வது பணக்காரராக மாறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜானி சில நாட்கள் முன்பு தனது நிறுவனத்தின் சில பங்குகளை விற்று சுமார் ரூ.1000 கோடி பெற்றுள்ளார். ஊரடங்கு காலத்தில் காதலியின் வீட்டில் இருந்தாலும் கட்டுக்கோப்பாக ஜானி செய்த கோடீஸ்வரராக மாற்றியுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
