'எனக்கு ஊசி போடப்போறீங்களா?'..'ஆமா'.. 'மூச்சுத்திணறும் சத்தம்'.. 'அடங்கிய பேச்சு மூச்சு'.. மரண சம்பவத்தில் கிடைத்த 45 நிமிட ஆடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Oct 03, 2019 02:39 PM

கடந்த வருடம் துருக்கி தூதரத்துக்குச் சென்ற சவுதி பத்திரிகையாளர் கஷோகியை, சவுதி இளவரசர் சல்மானின் பாதுகாவலர்கள் சூட்கேஸில் அடைத்துக் கொன்றதாகவும், அதற்கான ஆதாரங்களையும் துருக்கி அரசு வெளியிட்டிருந்தது.  அதன் பின், தூதரகத்தில் கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட இளவரசர் சல்மான், ஆனால் அந்த கொலைக்கு, தான் காரணமல்ல என்பதையும் தெரிவித்தார்.

turkey govt got 45 mins audio record in jamal khashoggi case

அதன் பின்னர் அமைதியாய் இருந்த இந்த பிரச்சனை மீண்டும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதன்படி, ஐ.நா. விசாரணைக்கு, கஷோகியின் மரண சம்பவத்தை எடுத்துச் செல்ல உதவும் வழக்கறிஞர் ஹெலினா கென்னடி அளித்த பேட்டியில், கஷோகி இறந்த தினத்தன்று, இறப்பதற்கு முன்னா அவர் தூதரத்துக்குள் நுழையும்போது அவரைப்பார்த்து பலரும், ‘பலிகொடுப்பதற்கான விலங்கு வருகிறது’ என்றெல்லாம் பேசி சிரித்துள்ள சம்பவஒரு ஆடியோ டேப்பில் பதிவாகியுள்ளதாகவும், அந்த ஆதாரங்களை துருக்கி அரசு தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அதிரவைக்கும் இந்தப் பேட்டியில் மேலும்,  அவர் ‘எனக்கு எதாச்சும் ஊசி போடப் போறீங்களா?’ என்று கேட்க, யாரோ ‘ஆமாம்’என்கின்றனர். இதனையத்து அவரது மூச்சுத் திணறும் சத்தம் அந்த ஆடியோ டேப்பில் கேட்கிறது. கடைசியாக அவரது முகத்தில் பிளாஸ்டிக் பைகளைக்கட்டி மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று இதை வைத்து புரிந்துகொள்ள சந்தேகம் எழுவதாக ஹெலினா குறிப்பிட்டுள்ளார்.

Tags : #JAMAL KHASHOGGI #EVIDENCE