மனிதர்களை விட பூனைகள் அதிகம் வாழும் அதிசய நகரம்! என்ன ஆச்சரியமா இருக்கா?
முகப்பு > செய்திகள் > உலகம்By Arunachalam | Apr 03, 2019 09:35 PM

தைவான் நாட்டில் ஹோடாங் என்ற கிராமத்தில் தற்போது மனிதர்களை விட பூனைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
இந்த கிராமத்தில் ஒரு காலத்தில் நிலக்கரி சுரங்கம் இருந்துள்ளது,. 1900ம் ஆண்டுகளின் துவக்கத்தில் இந்த கிராமத்தில் நிலக்கரிகளை வெட்டியெடுக்கும் பணி துவங்கியது. நிலக்கரி சுரங்கம் இருக்கும் வரை பலர் தங்கள் ஊர்களை காலி செய்து விட்டு இந்த கிராமத்திலேயே வசிக்க துவங்கி இதையே தங்களின் ஊராக மாற்ற துவங்கினர். ஆனால் கடந்த 1990ம் ஆண்டு நிலக்கரிகளை அங்கிருந்து எடுக்க தடை விதிக்கப்பட்டு நிலக்கரிசுரங்கம் மூடப்பட்டது.
இந்நிலையில், நிலக்கரி சுரங்கம் மூடப்பட்ட பின்பு அங்குள்ளவர்கள் வேலை வாய்ப்புகளை தேடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது அங்கு சுமார் 6 ஆயிரம் பேர் தான் வசிக்கும் நிலையில் அங்கு பூனைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
தற்போது அதை வைத்தே அந்த கிராமம் ஒரு சுற்றுலா தளமாக மாறிவிட்டது. இந்த கிராமத்தில் ரோட்டில் ஏராளமான பூனைகளை காண முடியும். வீடுகள், கடைகள், ஏன் ஓட்டல் மற்றும் பப்களில் உள்ளே கூட பூனைகள வந்து செல்லும். அந்த கிராமத்தில் பூனைகளை யாரும் தடுப்பது இல்லை.
இந்நிலையில், இதை காணவே பலர் இந்த கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.
