‘பிரபல சீரியல் கில்லரின்’ இன்னொரு கொடூர செயல்!.. 17 வருடங்களுக்கு பின் அப்ரூவரான முன்னாள் மனைவி.. பரபரப்பு திருப்பம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 23, 2020 11:48 AM

பிரித்தானியாவில் காணாமல் போன சிறுமி மேட்லின் மெக்கேனைப் போலவே, பிரான்சிலும் 17 ஆண்டுகளுக்கு முன் மாயமான பள்ளி மாணவியை கொலை செய்தது தன் முன்னாள் கணவர்தான் என பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

serial killer\'French Maddie\' ex-wife confesses about girl missing case

பிரான்சில் Estelle Mouzin(9)என்ற பள்ளி மாணவி மாயமானாதை அடுத்து, அம்மாணவியை நீண்ட காலமாக போலீசார் தேடி வந்த நிலையில், Estelle என்கிற அந்த மாணவி என்ன ஆனாள் என்றே தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவளது சடலமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டாகியிருக்கிறது.

பிரஞ்சு சீரியல் கில்லரான Michel Fourniret என்பவரின் முன்னாள் மனைவியான, Monique Olivier, மாணவி Estelle-வை கடத்தியதுடன், வன்புணர்வு செய்து, கழுத்தை நெறித்துக் கொன்றது தனது முன்னாள் கணவர் Michel Fourniret-தான் என்று தெரிவித்துள்ளார். Monique Olivier இவ்வாறு வாக்குமூலம் அளித்ததை அடுத்து, Fourniret தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான். இந்நிலையில் Fourniret உதவியுடன் மாணவியின் சடலத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஏழு சிறுமிகள் மற்றும் ஒரு இளம்பெண்ணை கொலை செய்ததாக, சீரியல் கில்லரான Fourniret,கடந்த 2008இல் சிறையில் அடைக்கப்பட்டாலும், Estelle குறித்த எந்த குற்றங்களை பற்றியும் அவர் வாயை திறக்காத நிலையில்,  கொலை மற்றும் கடத்தலில் தொடர்பு இருந்ததற்காக 28 ஆண்டுகள் ஜாமீனில் வர இயலாத வகையில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் Olivierன் சாட்சி, இவ்வழக்கின் மர்ம முடிச்சை கட்டவிழ்த்துள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Serial killer'French Maddie' ex-wife confesses about girl missing case | World News.