'இத்தன வருஷத்துல.. இது நடக்காம இருந்திருக்குமா?'.. இப்போ அதுவும் கன்ஃபார்ம் ஆயிடுச்சு.. டைட்டானிக் கப்பலின் நிலை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 22, 2019 12:49 PM

உலகின் முக்கியமான நினைவுகளில் டைட்டானிக் கப்பலும் ஒன்று. அந்த கப்பல் மூழ்கினாலும் அந்த வரலாற்று சம்பவம் இன்னும் மூழ்கவில்லை.அட்லாண்டிக் கடற் பரப்பில் இருந்து சுமார் 3800 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ள இந்த டைட்டானிக் கப்பலின் சிதைவுப் படிமங்களோடுதான் சில மனிதர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Sub dive confirms that titanic ships lost its other parts

2200 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த கப்பலில் இருந்த 1500 பேர் இந்த கோர சம்பவத்தில் தங்கள் உயிரை இழந்த பின்பு இத்தனை ஆண்டு காலம் இதன் படிமம் சிதைவுறாமல் இருந்தது. ஆம், இந்த ஆர்.எம்.எஸ் டைட்டானிக் கப்பலின் சிறப்பே அதன் சில பாகங்களைத் தவிர மற்ற பாகங்கள் எல்லாம் உப்பினாலும், பாக்டீரியாக்களாலும் அரிக்கப்படாமல் இருந்ததுதான்.

ஆனால் இப்போது அதுவும் தொடர்ந்து நிகழத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் முக்கிய சப்-டைவ் ஒன்றை பசுபிக் மேற்பரப்பின் ஆழத்தில் இருந்து குறைவான தூரத்தில் இருந்து, சப்-மெரின் அதிகாரிகள் வெளியெடுத்துள்ளனர். அதன்படி, மற்ற பாகங்கள் மெல்ல மெல்ல அழிந்து வந்தது உறுதியாகியுள்ளது.

Tags : #TITANIC