‘பறக்கும் விமானத்தில் இருந்து தவறி விழுந்த பயங்கரம்..’ சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jul 02, 2019 05:35 PM

பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளது லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Stowaway falls into London garden from Kenya Airways plane

கடந்த ஞாயிற்றுக்கிழமை கென்ய தலைநகர் நைரோபியிலிருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு கென்ய ஏர்வேஸ் விமானம் ஒன்று வந்துள்ளது. அதில் கியர் பாக்ஸ் அருகே ஒருவர் ஒளிந்து அமர்ந்தபடி பயணித்துள்ளார். லண்டன் விமான நிலையத்தை நெருங்கிய நிலையில் விமானி கியர் பாக்ஸை இறக்க அப்போது அதில் மறைந்திருந்த நபர் கீழே விழுந்துள்ளார். கிளாபம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், “நான் ஏதோ சத்தம் கேட்டு தோட்டத்தில் எட்டிப் பார்த்தபோது அங்கே ரத்த வெள்ளத்தில் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். அவர் இறந்து கிடந்த பகுதிக்கு அருகில் இருந்த சுவரில் ரத்தம் தெறித்திருந்தது. அதை வந்து பார்த்த பக்கத்து வீட்டுக்காரரும் நடுங்கிவிட்டார்” எனக் கூறியுள்ளார். பின்னர் இதுபற்றி அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். 

இந்தச் சம்பவம் பற்றிப் பேசியுள்ள கென்ய ஏர்வேஸின் செய்தித் தொடர்பாளர், “விமானத்துக்கு எந்த சேதமும் இல்லை. விமானத்தின் கியர் பாக்ஸில் ஒரு பை, தண்ணீர் மற்றும் உணவைக் கண்டுபிடித்துள்ளோம். நைரோபியிலிருந்து 8 மணிநேரம் பயணம் செய்து லண்டன் வந்து உயிரிழந்த அந்த நபருக்கு ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார். லண்டன் போலீஸார் உயிரிழந்தவர் யாரென அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : #STOWAWAY