VIDEO: சீறிப்பாய்ந்த ராக்கெட்... என்ன ஆச்சு திடீர்னு?.. கண் முன்னாடியே... நொறுங்கிய கனவு!.. என்ன செய்யப்போகிறார் எலான் மஸ்க்?
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் புரோட்டோடைப் பூமிக்கு திரும்பி வந்த போது வெடித்துச் சிதறியுள்ளது.

டெக்சாசுக்கு அருகே உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் இருந்து நேற்று தீப்பிழம்புகளை கக்கியவாறு வானில் பாய்ந்த இந்த விண்கலம் 8 கிலோ மீட்டர் உயரம் வரை சென்றது.
ஆனால் திரும்பி வரும் போது, எரிகலன் தொழில்நுட்ப கோளாறால் பூமியில் விழுந்து வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
3 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட இந்த புரோட்டோடைப்பின் சோதனை ஓட்டத்தின் போது ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து எஞ்சின்களும் செயலிழந்தன.
16 மாடி அளவுக்கு உயரமுள்ள இந்த புரோட்டோடைப் விண்கலத்தை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்த பின்னர், ஸ்டார்ஷிப் மூலமாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது என்பது ஸ்பேஸ்எக்ஸ் அதிபர் எலான் மஸ்கின் கனவுத் திட்டம். ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
