'உனக்கென்னப்பா, நீ பின்லேடன் பையன்'... 'அப்படி சத்தியமா நினைக்காதீங்க'... 'என் நிலைமை என்னன்னு தெரியுமா'?... குமுறிய ஒமர் பின்லேடன்!
முகப்பு > செய்திகள் > உலகம்எனது தந்தையின் செயலுக்கு மன்னிப்பு கேட்பதாக ஒமர் பின்லேடன் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் பின்லேடன் என்ற பெயரைக் கேட்டாலே இந்த உலகமே அதிர்ந்தது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு பின்லேடனின் தலைக்கு அமெரிக்கா விலை வைத்த நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பின்னர், கடந்த 2011ல் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்கச் சிறப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றார்கள்.
பின்னர் பின்லேடனின் உடலை கடலுக்கடியில் புதைத்து விட்டதாக அமெரிக்க அறிவித்தது. இதற்கிடையே தந்தையின் மறைவுக்குப் பின்னர் அல் கொய்தா அமைப்பின் தலைமை பொறுப்புக்கு வரத் தாம் வற்புறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதனைத் தாம் நிராகரித்து விட்டதாகவும் ஒமர் பின்லேடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தனது மனதிலிருந்த மனக்குமுறல்களை அவர் கொட்டியுள்ளார். அதில், ''தனது தந்தை பின்லேடன் தமது பிள்ளைகளை விரும்பியதை விட அவரது எதிரிகளையே அவர் அதிகமாக வெறுத்தார். நான் அல் கொய்தா அமைப்பில் இணைந்திருந்த காலங்கள் முட்டாள்தனமானது, அது எனது வாழ்க்கையை வீணாக்கியது என்பதைப் பின்னர் தான் உணர்ந்து கொண்டேன்.
நானும் எனது சகோதரனும் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சுறுத்தலோடு தான் வாழ்க்கையை நகர்த்தி வந்ததாகக் குறிப்பிட்டுள்ள ஒமர் பின்லேடன், தமது மனைவியுடன் இணைந்து இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது அமெரிக்கா சென்று சுற்றிப்பார்ப்பது தனது கனவு எனக் குறிப்பிட்டுள்ள ஒமர் பின்லேடன், எனது வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களை விடச் சோகமான தருணங்கள் தான் இருக்கிறது. பலரும் நினைப்பது போல பின்லேடன் மகன் என்பதால் ராஜ வாழ்க்கை வாழவில்லை'' என வேதனையுடன் கூறியுள்ளார்.