'பயங்கரவாதிகளை அழிக்குறதுல முன்னோடி இவர்தான்!'... ஒசாமா பின்லேடனின் மருமகள் பரபரப்பு பேட்டி!... சூடு பிடிக்கும் அமெரிக்க தேர்தல்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு ஒசாமா பின்லேடனின் மருமகளான நூர் பின் லேடின் பேட்டி அளித்துள்ளார்.
அதில், “அமெரிக்க அதிபராக ஜோ பிடன் தேர்ந்தெடுக்கப்பட்டால், செப்டம்பர் 11 தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்துள்ளார். ஒபாமா மற்றும் பிடன் ஆட்சி நிர்வாகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கம் பெருகியதுடன், ஐரோப்பாவிற்கு வரவும் வழிவகுத்தது. டிரம்ப், பயங்கரவாதிகளை ஒழிப்பதில் முன்மாதிரியாக திகழ்கிறார். மேலும் அமெரிக்காவையும் எங்களையும், வெளிநாட்டு பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து டிரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பேசியவர் ட்ரம்ப் 2015-ல் அமெரிக்க அதிபராக போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து தான் அவருக்கு ஆதரவாளராக இருந்ததாகவும், அந்த மனிதரை தூரத்திலிருந்தே பார்த்ததாகவும், அவரின் உறுதியான தீர்மானங்களை பாராட்டுவதாகவும், எனவே அவர் மீண்டும் அதிபராக வர வேண்டும் என்றும் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்திற்கும் இது இன்றியமையாதது என்றும் நூர் பின் லேடின் பேசியுள்ளார்.
அத்துடன், “ஐரோப்பாவில் கடந்த 19 ஆண்டுகளாக நடந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள், எங்களை அவை முழுமையாக அசைத்துவிட்டன” என்றும் நூர் பின் லேடின் வருந்தியுள்ளார். தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்துவந்தாலும், இதயத்தில் தான் ஒரு அமெரிக்கராகவே தன்னை நினைத்துக்கொண்டு வாழ்வதாக நூர் பின் லேடின் குறிப்பிட்டுள்ளார்.