"கொஞ்ச SECOND'U தான்.." எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு.. மக்கள் முன்னிலையில் நேர்ந்த கொடூரம்.. கண் பார்வை பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 14, 2022 07:47 PM

புகழ் பெற்ற எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, அமெரிக்க மாகாணத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம், உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Salman rushdie health update after newyork incident

Also Read | சுரங்க பாதையில் சிக்கிய நபர்.. 8 மணி நேரத்துக்கு அப்புறம் மீட்ட 'போலீஸ்'.. "அவரு அங்க எப்படி சிக்குனாருன்னு தெரிஞ்சப்போ ஷாக் ஆயிடுச்சு"

கடந்த 1988 ஆம் ஆண்டு, சல்மான் ருஷ்டி எழுதி இருந்த நாவல் ஒன்றில், இஸ்லாம் மக்களின் நம்பிக்கை தொடர்பாக அவர் எழுதி இருந்த கருத்துக்கள், அவருக்கு நிறைய அச்சுறுத்தல்களை உருவாக்கி கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 1989 ஆம் ஆண்டு, ஈரானின் தலைவராக அயதுல்லா என்பவர், சல்மான் ருஸ்டியை கொல்வதற்காக உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Salman rushdie health update after newyork incident

இதனால், கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கும் சல்மான் ருஷ்டி ஆளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரே ஒரு புத்தகத்தின் காரணமாக, உலக அளவில் இஸ்லாமிய மக்கள் மத்தியில் அதிகம் எதிர்ப்பினை சம்பாதித்து வந்த சல்மான் ருஷ்டி, சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற சென்றிருந்தார்.

மேலும், இந்த நிகழ்வுக்காக அங்கே நூற்றுக்கணக்கானோர் கூடி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது, அங்கே இருந்த பார்வையாளர்களில் ஒருவர், திடீரென மேடையில் ஏறி, சல்மான் ருஷ்டியை கடுமையாக தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த எதிர்பாராத தாக்குதல் காரணமாக, நிலைகுலைந்து போன சல்மான் ருஷ்டியை அங்கே இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Salman rushdie health update after newyork incident

மேலும், சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் ஹாடி மாதர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, அதிக ரத்தத்தை இழந்த சல்மான் ருஷ்டி, செயற்கை சுவாச கருவியுடன் கூடிய வெண்டிலேட்டரில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதே போல, அவரது கல்லீரல் பலத்த சேதத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாமல், அவரது கண் பார்வையும் முழுதாக பறி போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக, உலகம் முழுவதிலுமுள்ள எழுத்தாளர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Salman rushdie health update after newyork incident

இதனைத் தொடர்ந்து, தற்போது வலம் வரும் தகவல்களின் படி, வெண்டிலேட்டர் நீக்கப்பட்டதாகவும், சல்மான் ருஷ்டியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அவரது உடல்நிலை குறித்து உறுதியான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | "நாலு வருஷமா இதான் பண்ணுறாரு.." வேலையே பாக்காம சம்பளம் வாங்கும் வாலிபர்.. மிரண்டு போன நெட்டிசன்கள்

Tags : #SALMAN RUSHDIE #SALMAN RUSHDIE HEALTH UPDATE #NEWYORK INCIDENT

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Salman rushdie health update after newyork incident | World News.