"பண்றது எல்லாம் பண்ணிட்டு முளிக்குறத பாரு"... 'செல்ல நாய்' செஞ்சு வெச்ச 'வேல'... 'பணிக்கு' சென்று திரும்பிய உரிமையாளருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக செல்லப்பிராணியான நாய் மக்களுடன் மிகவும் அன்புடன் இருக்கும் நிலையில், சில நேரம் மிகவும் குறும்புத்தனமாகவும் நடந்து கொள்ளும். அப்படி நாய் ஒன்று குறும்புத்தனமான செய்த செயல் அதன் முதலாளிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐல் ஆஃப் மேன் நாட்டை சேர்ந்தவர் ஜோஸலின் ஹார்ன். இவர் தனக்கு கிடைக்கும் பணத்தில் இருந்து சிறுக சிறுக சுமார் 100 டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் ஏறக்குறைய 7 ஆயிரம் ரூபாய்) சேமித்து வைத்திருந்த நிலையில், பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய ஜோஸலினுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தனது வீட்டிலுள்ள செல்ல நாயான பெக்கி அனைத்து பணத்தையும் எடுத்து சாப்பிட்டுள்ளது. முதலில் கணவர் இதுகுறித்து தெரிவிக்க ஜோஸலின், அவர் விளையாட்டாக கூறுவதாக நினைத்துள்ளார். ஆனால் உள்ளே சென்ற பார்த்த போது தான் அவருக்கு உண்மை புரிந்தது. உடல்நிலை சரியில்லாத பெக்கி, மறுநாள் மென்று விழுங்கிய பணம் அனைத்தையும் கக்கியுள்ளது. அவற்றை கழுவி சுத்தம் செய்து வரிசை எண்களை கண்டுபிடிக்க முடிந்தால் பணத்தை திரும்ப பெறலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் அதுவும் முடியாமல் போய்விட்டது.
இதுகுறித்து ஜோஸலின் கூறுகையில், 'எனது செல்ல நாய் பெக்கிக்கு பார்க்கும் எல்லாவற்றையும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனால், எனது பொருற்களை அதனிடம் இருந்து காப்பாற்ற, அறையை எப்போதும் மூடி வைத்திருப்பேன். ஆனால், அது எப்படியோ உள்ளே நுழைந்து எனது சேமிப்பு பணத்தை நாசமாக்கி விட்டது' என பரிதாபமாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
