இந்த பூமியில 'நரகம்'னு ஒண்ணு இருந்துச்சுன்னா... 'அது அவங்களோட வாழ்க்கை தான்...' - ஐ.நா சபை பொதுச்செயலாளர் வேதனை...!
முகப்பு > செய்திகள் > உலகம்காசாவில் நடைபெற்று வரும் தாக்குதலில் குழந்தைகள் படும்பாட்டை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஒரு வரியில் விளக்கியுள்ளார்.
இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தின் மீது நில ஆக்கிரமிப்பு மேற்கொண்டு பல இடங்களை கைப்பற்றியுள்ளது. தற்போது இஸ்ரேலின் கவனம் காசா பகுதிக்கு சென்று அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா பகுதியில் இருக்கும் போராளிகளும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு போர் பதற்றம் உருவாகியுள்ளது. அதோடு பல மக்களும் குழந்தைகளும் தங்கள் உறவினர்களையும் , பெற்றோர்களையும், வீடுகளை இழந்தும், வாழ்க்கையையும் இழந்தும் வருகின்றனர்.
இதுவரை சுமார் பாலஸ்தீனத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 60 பேர் குழந்தைகள்.
இதுகுறித்து உலக நாடுகள் துக்கம் தெரிவித்து வந்தாலும், ஒரு சில உலக நாடுகள் பின்புறமாக ஆயுதங்களை இஸ்ரேல் அரசிற்கு பரிமாறியும் வருகிறது.
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அங்கு வாழும் மக்கள் குறித்தும், குழந்தைகள் குறித்தும் கூறியுள்ளார்.
அதில், 'இதுவரை நடைபெற்ற யுத்தத்தினால் சுமார் 50,000-த்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக ஐ.நாவிடம் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு அடைக்கலம் கிடைத்துள்ள இடங்களிலும் குறைந்த அளவிலான நீரும், உணவும் தான் கிடைக்கிறது.
மக்கள் தஞ்சம் புகுகின்ற இடங்களிலும் மனிதத்தை இழந்தவர்கள் தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது.
அதனால் பூமியில் ஒரு நரகம் என ஒன்றிருந்தால் அது காசாவில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கை' என தெரிவித்துள்ளார்.