சாவ கண் முன்னாடி காட்டிட்டாங்க பரமா..! மரண அனுபவம் தரும் புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By K Sivasankar | Mar 29, 2023 06:42 PM

என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் அனைத்தையும் கண்டுபிடித்த, கண்டுபிடித்து வரும் மனிதனுக்கு மரணத்திற்கு பிறகான நொடிகள் எப்படி இருக்கும் என்பதுதான், அவன் அறியாத அவனுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

New Virtual Reality Simulation Offers Near Death Experience

                                 Image credit : Feethink/Youtube

Also Read | ‘நான் போறேன்’.. ஜீவா & கண்ணனை அடுத்து மூர்த்தியா..?.. உடையும் Pandian Strore குடும்பம்..!

அதை அறிந்து கொள்ளும் தீரா ஆசையும் ஆவலும் இல்லாத ஒருவரும் இருக்க முடியாது. இந்த நிலையில் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தும் தொழில்நுட்பம் தற்போது மரணத்திற்கு பிறகான நொடிகள் எப்படி இருக்கும் என்பதையும் நாம் மரணம் அடையாமல் உணரக்கூடிய வாய்ப்பை உருவாக்கித் தந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஆம் ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் தொழில்நுட்பம் மரணத்தின் போது ஏற்படக்கூடிய அனுபவத்தை மக்களுக்கு மெய் நிகர் அனுபவமாக தருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஷான் கிளாட்வெல் என்பவர் தான் பாஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் என்ற இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளார். இதில் ஒரு மனிதனை இறப்பு நெருங்கும் பொழுது அவருக்கு எந்த உணர்வும் உண்டாகிறது, இதயத்துடிப்பு நிலை முதல் மூளை நிலைப்பாடு வரை அனைத்தும் எப்படி இருக்கும், எந்த மாதிரி இயங்கும், அதற்கான உணர்வு நமக்கு எப்படி இருக்கும் என்பது அனைத்தையும் அனுபவமாக நமக்கு வழங்க முயற்சி செய்கிறது இந்ததொழில்நுட்பம்.

இதற்கு தற்காலிகமாக ஒரு மருத்துவமனை படுக்கையில் படுத்துக்கொள்ள வேண்டும். இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவத்தை பெறக்கூடிய அந்த நபர் ஹார்ட் மானிட்டருடன் இணைக்கப்பட்டு மருத்துவர்களின் உதவியுடன் இந்த தொழில்நுட்பத்துக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அப்படி மெல்போர்னைச் சேர்ந்தவரும் பிரபல கண்காட்சியாளருமான மார்கஸ் க்ரூக்,  இதில்  மரண அனுபவம் எப்படி இருக்கும் என்பதை விவரித்து இருக்கிறார். இது குறித்த  அவரது வீடியோவில், பதட்டத்தையும் பீதியையும் நமக்கு மரணம் எப்போதுமே உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. இது  இறந்துவ்ட்டால் என்ன மாதிரி அனுபவம் உண்டாகும் என்பதை நம்மால் இப்போதே உணர முடிகிறது.  இதயத்துடிப்பு மானிட்டரில் நம் விரலை வைத்துவிட்டு, கையை உயர்த்த சொல்கிறார்கள். அப்போது மரணத்திற்கு அருகில் செல்லக்கூடிய அனுபவம் கிடைக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Also Read | 70 வயதில் பீமரதசாந்தி திருமண பூஜையில் குடும்பத்துடன் நடிகர் செந்தில்..! வைரல் புகைப்படங்கள்..

Tags : #VIRTUAL REALITY SIMULATION #DEATH EXPERIENCE

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. New Virtual Reality Simulation Offers Near Death Experience | World News.