சுமார் 100 வருஷத்துக்கு முன்னாடி தொலஞ்சுபோன குட்டி புத்தகம்.. ஏலத்தில் ஏற்பட்ட கடும்போட்டி.. இவ்வளவு கோடி கொடுத்து வாங்குற அளவுக்கு என்ன ஸ்பெஷல்?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Apr 27, 2022 04:31 PM

புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் சார்லட் ட்ராண்டே தன்னுடைய 13 வயதில் எழுதிய சிறிய புத்தகம் ஒன்று நம்ப முடியாத விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.

Lost Charlotte Brontë manuscript reportedly sells for USD 1.25 Million

Also Read | 100 வயதான மரம்.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்.. கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திய மக்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

சார்லட் ட்ராண்டே

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற நாவலாசிரியரான சார்லட் 1816 ஆம் ஆண்டு பிறந்தவர். தன்னுடைய இளம் வயதிலேயே எழுத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட சார்லட் நாவல் எழுத துவங்கினார். இவருடைய முதல் நாவலான 'தி ப்ரோபெஸ்ஸர்' எழுதி முடிக்கப்பட்டபோது அதனை பிரசுரிக்க எந்த பதிப்பு நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அதன் பிறகு இவர் எழுதிய  Jane Eyre எனும் நாவல் ஐரோப்பா முழுவதும் கவனம் பெற்றது. அதனை தொடர்ந்து ஆங்கில மொழியின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்டார் சார்லட்.

ஆனால், தற்போது வைரலாகி இருக்கும் சிறிய புத்தகம் சார்லட் தனது 13 வது வயதில் எழுதிய சிறிய பாடல்கள் ஆகும்.

Lost Charlotte Brontë manuscript reportedly sells for USD 1.25 Million

காணாமல் போன புத்தகம்

கையால் எழுதப்பட்டு, நூல் கொண்டு தைத்து சார்லட்டே இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில், சிறிய பாடல்களை எழுதியுள்ள சார்லட், அவை உருவான விதம் குறித்தும் குழந்தை தனம் மாறாமல் பதிவிட்டுள்ளார். இலக்கிய உலகில் பிரசித்திபெற்ற சார்லெட்-ன் இந்த குட்டி புத்தகம் கடந்த 1916 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் நடந்த ஏலத்தில் 520 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டது. அதன் பிறகு அந்த புத்தகத்தை யார் வைத்திருக்கிறார்கள்? என்ற தகவலே இல்லை.

கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 21 முதல் 24 ஆம் தேதிவரையில் நடைபெற்ற நியூயார்க் சர்வதேச பழங்கால புத்தக கண்காட்சியில் சார்லெட்டின் இந்த குட்டி புத்தகம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

Lost Charlotte Brontë manuscript reportedly sells for USD 1.25 Million

ஏலம்

சார்லெட் தனது 13 வயதில் எழுதி, தானே வெளியிட்ட இந்த புத்தகத்தை Friends of the National Libraries என்னும் அமைப்பு 1.25 மில்லியன் அமெரிக்க டாலர் (9.56 கோடி ரூபாய்) கொடுத்து வாங்குவதாக அறிவித்தது. இதனை அடுத்து தனது வாழ்நாள் முழுவதும் சார்லட் கழித்த இங்கிலாந்திற்கு நூறாண்டுகள் கழித்து மீண்டும் பயணப்பட இருக்கிறது இந்த குட்டி புத்தகம்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு நவம்பரில் சார்லட் எழுதிய  'Young Men's Magazine' என்னும் சிறிய புத்தகம் 850,000 அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு வந்த சார்லெட் கைப்பட எழுதிய 7 சிறிய புத்தகங்களை பிரிட்டிஷ் நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் குழு 19.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

Tags : #LOST CHARLOTTE BRONTë #LOST CHARLOTTE BRONTë MANUSCRIPT #SELLS #ஆங்கில நாவலாசிரியர் #சார்லட் ட்ராண்டே

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Lost Charlotte Brontë manuscript reportedly sells for USD 1.25 Million | World News.