'செக்ஸ்' பொம்மை-யை மணந்த பாடி பில்டர்... "ஒருவழியா எங்க 'கல்யாணம்' நடந்துருச்சு, இனிமே இந்த 'பந்தம்' தொடரும்!!!..."
முகப்பு > செய்திகள் > உலகம்கஜகஸ்தான் பகுதியை சேர்ந்த பாடி பில்டர் ஒருவர், 'செக்ஸ்' பொம்மை ஒன்றை திருமணம் செய்துள்ளார்.

யூரி டோலோச்கோ (Yurii Tolochko) எனப்படும் அந்த நபர், கடந்த 2019 ஆம் ஆண்டு 'மார்கோ' எனப்படும் செக்ஸ் பொம்மையுடன் 8 மாதங்கள் உறவில் இருந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்கோவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தனது திருமணம் இந்தாண்டு மார்ச் மாதமே நடைபெறும் என யூரி அறிவித்திருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக அவரது திருமணம் தள்ளிப் போயுள்ளது.
மீண்டும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், யூரி சிறிய விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டிருந்தால் மீண்டும் அவர்களின் திருமணம் தள்ளிப் போனது. தற்போது, ஒரு வழியாக யூரி - மார்கோ திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும், 'இது நடந்து விட்டது. இனியும் தொடரும்' என்ற பதிவுடன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, சிலிகான் வகை பொம்மையான மார்கோவுடன் தான் நேரம் செலவிட்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் யூரி தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். மார்கோவுடன் வெளியே செல்வது, மார்கோவுடன் தான் நேரம் செலவிடும் பல புகைப்படங்களும் இவரது இன்ஸ்டா பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
மார்கோவை காதலிப்பதாக அறிவித்த போது, யூரி பலரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். அதன் பின்னர், மார்கோவிற்கு சிறந்த மருத்துவர்கள் மூலம் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்டதாகவும் யூரி தெரிவித்துள்ளார். அதே போல, மார்கோ தனது தோற்றத்தில் அதிகம் அக்கறை கொள்வதாகவும் தான்உணர்வதாக யூரி தெரிவித்துள்ளார். யூரியின் திருமணம் தொடர்பான வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
