‘என்னது லன்ச் சாப்பிட ரூ.31.66 கோடியா..?’ வித்தியாசமான ஏலத்தில் ஜெயித்த இளைஞர்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jun 05, 2019 07:02 PM

பங்குச் சந்தையின் ஜாம்பவான் என அழைக்கப்படும் வாரன் பஃபெட்டுடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ஜஸ்டின் சன் என்ற சீன இளைஞர் வெற்றி பெற்றுள்ளார்.

Justin Sun pays $4.6 million for lunch with Warren Buffett

சான் பிரான்ஸிஸ்கோவில் செயல்பட்டு வரும் கிளைட் என்ற தன்னார்வ அமைப்புக்காக கடந்த 19 ஆண்டுகளாக இப்படி ஏலம் நடத்தி நிதி திரட்டி அளித்து வருகிறார் பஃபெட். இந்த தொண்டு நிறுவனம் பசியில் வாடுபவர்கள், வீடில்லாதவர்களுக்கு உதவி வருகிறது.

இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சீனாவைச் சேர்ந்த 29 வயது இளைஞரான ஜஸ்டின் சன் வெற்றி பெற்றுள்ளார். பிட்காயினின் முன்னோடி என அழைக்கப்படும் ஜஸ்டின் கேட்ட ஏலத்தொகை 45.70 லட்சம் டாலராகும் (இந்திய மதிப்பில் சுமார் 31.66 கோடி). மன்ஹாட்டனில் உள்ள ஹோட்டலில் நடைபெறும் விருந்துக்கு பிளாக் செயின் தொழில்நுட்பம் சார்ந்த நண்பர்கள் 7 பேரை அழைத்துச் செல்ல இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார் ஜஸ்டின். ஆனால் வாரன் பஃபெட் பிட் காயின் பற்றிய எதிர்மறையான கருத்தைக் கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #WARRENBUFFETT #JUSTINSUN