Kaateri logo top

பிங்க் கலர்ல ஜொலிக்கும் சூழல் கேலக்சி..ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட வைரல் புகைப்படம்.. அதுக்குள்ள இருந்தது தான் பலரையும் பிரம்மிக்க வச்சிருக்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Aug 03, 2022 12:42 PM

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த கேலக்சியின் புகைப்படம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் பலரையும் பிரம்மிக்க செய்திருக்கிறது.

James Webb Space Telescope captures chaotic Cartwheel Galaxy

Also Read | "ஆரம்பத்துல சாதாரணமா தான் நெனச்சோம்.. இனி அத சரிபண்ண முடியாது".. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் மோதிய விண்கல்.. வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!

ஜேம்ஸ் வெப்

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா உருவாக்கியதுதான் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இதனை உருவாக்கும் பணிக்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 79 ஆயிரம் கோடி ரூபாய்) வாரி இறைத்தது அமெரிக்கா. கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி மனித குல வரலாற்றின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது.

பொதுவாக சூரியனில் இருந்து ஒளி நம்மை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகும். ஆக, 8 நிமிடத்திற்கு முன்பு இருந்த சூரியனை தான் நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதேபோல, பேரண்டம் உருவானதாக சொல்லப்படும் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான பிரபஞ்சத்தை ஜேம்ஸ் வெப் படம் பிடிக்க இருக்கிறது. இதன் மூலம் பிரபஞ்சம் தோன்றிய ஆரம்ப காலத்தை நாம் துல்லியமாக அறிய முடியும். இன்று புரியாத புதிராக இருக்கும் பல கேள்விகளுக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி சில ஆண்டுகளில் விடை அளிக்க இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

James Webb Space Telescope captures chaotic Cartwheel Galaxy

கேலக்சி

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் இந்த பயணத்தில் கேலக்சி ஒன்றில் இருக்கும் பல அறிய விஷயங்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. கார்ட்வீல் (Cartwheel) என்று அழைக்கப்படும் இந்த கேலக்சி பிரம்மாண்ட வீல் போன்று அமைந்திருக்கிறது. இதனுள் சிறிய வெள்ளை நிற வட்டமும், வெளியே வண்ணமிகு வட்டம் ஒன்றும் இருக்கிறது. இது துவக்கத்தில் பால்வழி மண்டலத்தை போல இருந்ததாகவும், சிறிய விண்மீன் கூட்டங்களுடன் இவை மோதியதில் இவற்றின் வடிவங்கள் மாறிவிட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு குளத்தில் ஒரு கல்லை எறிந்த பிறகு எழும் சிற்றலைகள் போல, இந்த கேலக்சியில் இருக்கும் வளையங்கள் தொடர்ந்து விரிவடைந்துகொண்டே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

James Webb Space Telescope captures chaotic Cartwheel Galaxy

கருந்துளை

பூமியில் இருந்து 500 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்த கேலக்சி நட்சத்திர உருவாக்கம் மற்றும் கருந்துளைகளுக்கு உள்ளே இருக்கும் மர்மம் குறித்து ஆராய உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்த கேலக்சியில் ஹைட்ரோகார்பன்கள் மற்றும் பிற இரசாயன கலவைகள் மற்றும் பூமியில் உள்ள தூசி போன்ற சிலிக்கேட் தூசுகள் நிறைந்த பகுதிகள் இருப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனிடையே இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "நீர், பனிமூட்டம், மேகம் எல்லாமே அந்த கோள்-லயும் இருக்கு".. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அளித்த தகவல்.. சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த நாசா ஆய்வாளர்கள்..!

Tags : #JAMES WEBB SPACE #JAMES WEBB SPACE TELESCOPE #CARTWHEEL GALAXY #ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

மற்ற செய்திகள்